தூத்துக்குடி-பெங்களூரு இடையே மீண்டும் விமான சேவை வருகிற 27-ந் தேதி முதல் தொடங்குகிறது


தூத்துக்குடி-பெங்களூரு இடையே மீண்டும் விமான சேவை வருகிற 27-ந் தேதி முதல் தொடங்குகிறது
x
தினத்தந்தி 14 Oct 2019 10:15 PM GMT (Updated: 14 Oct 2019 10:25 PM GMT)

தூத்துக்குடி-பெங்களூரு இடையே வருகிற 27-ந் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி விமான நிலையம் சமீபகாலமாக வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. இதனால் விமான நிலைய விரிவாக்கம் பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 2 தனியார் விமான நிறுவனங்கள் மூலம் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த நிறுவனங்கள் தினமும் மொத்தம் 5 விமானங்களை இயக்கி வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு ஒரு தனியார் விமானம் இயக்கப்பட்டது. பின்னர் அந்த விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு தனியார் விமானம் இயக்கப்பட உள்ளது.

இந்த விமான சேவை மீண்டும் வருகிற 27-ந் தேதி முதல் தொடங்குகிறது. இந்த விமானம் தினமும் காலை 5.25 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு 7.10 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு 9.30 மணிக்கு பெங்களூரை சென்றடையும்.

இதனால் தூத்துக்குடி விமான நிலையம் பரபரப்பாகி வருகிறது. தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூர் செல்பவர்களுக்கு இந்த விமானம் வாய்ப்பாக அமைந்து உள்ளது.

Next Story