திருப்பரங்குன்றத்தில் இளம்பெண் தற்கொலை விவகாரம்: புதைக்கப்பட்ட கருச்சிதைவு தோண்டி எடுக்கப்பட்டது
திருப்பரங்குன்றத்தில் இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் புதைக்கப்பட்ட கருச்சிதைவை தோண்டி எடுத்து மருத்துவ குழுவினர் பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
திருப்பரங்குன்றம்,
மதுரை திருப்பரங்குன்றம் அமைதிசோலை 5-வது கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). மருந்து பொருட்கள் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஹார்விபட்டியை சேர்ந்த நாராயணன் மகள் ரேவதிக்கும்(20) ஓராண்டிற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகும் ரேவதி கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த ரேவதி, மருத்துவ பரிசோதனைக்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு தனக்கு அடிக்கடி வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பெற்றோர், தனது மகளை மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது ரேவதிக்கு கரு கலைந்துவிட்டது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 5 மாத கருச்சிதைவை ேரவதியின் பெற்றோர் கொண்டு வந்து, அதை துணியால் கட்டி கார்த்திக் வீட்டின் முன்பு புதைத்தனர். இதற்கிடையே பெற்றோர் வீட்டில் இருந்த ரேவதி கடந்த சில மாதத்துக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். இதுதொடர்பாக திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் மதுரை மாவட்ட கலெக்டரிடம் ரேவதியின் தந்தை நாராயணன் ஒரு மனு அளித்தார். அதில், தனது மகளின் வயிற்றில் வளர்ந்த கருவின் சிதைவிற்கும், மகள் தற்கொலைக்கும் ஹார்விபட்டியை சேர்ந்த அருண்(26) என்பவர்தான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ரேவதியும், அருணும் திருமணத்திற்கு முன்பு காதலித்து வந்தார்களாம். திருமணத்திற்கு பிறகும் அவர்களது காதல் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. அருண், ரேவதியிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தாராம். மேலும் அவர் ரேவதிக்கு வாட்ஸ்-அப்பில், "நான் உனக்கு வாழ்வு தருகிறேன். நீ உன் கணவனை விட்டுவிட்டு வந்து விடு. அதற்கு முன் உன் வயிற்றில் வளரும் சிசுவை கருக்கலைப்பு மாத்திரை மூலம் கலைத்து விடு" என்று தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.
அருணின் ஆசை வார்த்தையால்தான் கருக்கலைப்பு மாத்திரையை ரேவதி சாப்பிட்டு இருப்பாரா? என்ற கோணத்தின் அடிப்படையில் அருண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே போலீசாரின் விசாரணை தகவலை தொடர்ந்து, திருப்பரங்குன்றம் தாசில்தார் நாகராஜ், திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் மதுரை அரசு மருத்துவமனை குழுவினர், தடயவியல் நிபுணர்கள திருப்பரங்குன்றம் அமைதி சோலை 5-வது கிழக்கு தெருவில் உள்ள ரேவதியின் கணவர் கார்த்திக் வீட்டு முன்பு ஏற்கனவே புதைக்கப்பட்ட சிசுவின் சிதைவை எடுக்க தோண்டினர். அதில், 2 சிறு எலும்பு துண்டுகள் இருந்தன. அதை டாக்டர் ரமா, தடயவியல் அலுவலர் ரமேஷ் ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story