தோவாளை முதல் ஆரல்வாய்மொழி வரை பா.ஜ.க.வினர் பாதயாத்திரை பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
தோவாளை முதல் ஆரல்வாய்மொழி வரை பா.ஜ.க.வினர் பாதயாத்திரை மேற்கொண்டனர். இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
ஆரல்வாய்மொழி,
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி காந்தியின் கொள்கைகளை அடித்தட்டு மக்கள் வரை சென்றடையும் வகையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தோவாளை ஒன்றிய பா.ஜனதா சார்பில் பாதயாத்திரை தோவாளை ஆற்று பாலம் அருகே தொடங்கியது.
இந்த பாதயாத்திரைக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய பிரசார அணி தலைவர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள்
இந்த பாதயாத்திரை மெயின்ரோடு வழியாக ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை சென்றடைந்தது. வரும் வழியில் பெருமாள்புரம் காமராஜர் சிலைக்கும், வடக்கூர் வ.உ.சி.சிலைக்கும் பா.ஜ.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பா.ஜ.க.வினர் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
இதில் கோட்ட இணை பொறுப்பாளர்கள் வேல் பாண்டியன், கணேசன், மாநில இளைஞரணி செயலாளர் சிவபாலன், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் முருகன், பா.ஜ.க. நிர்வாகிகள் ஜெயராம், மகாதேவன் பிள்ளை, கிருஷ்ணன், மாதேவன் பிள்ளை, சுடலைமுத்து, விக்னேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story