பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்; வாழைகள் நாசம்


பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்; வாழைகள் நாசம்
x
தினத்தந்தி 16 Oct 2019 4:00 AM IST (Updated: 16 Oct 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் செய்ததில் வாழைகள் நாசம் ஆனது.

பவானிசாகர்,

பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். விவசாயி. இவர் தன்னுைடய தோட்டத்தில் வாழைகளை பயிரிட்டு உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை ஒன்று சிவராஜின் தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அந்த யானை, அங்குள்ள வாழைகளை முறித்து தின்றது. மேலும் அருகில் உள்ள நால்ரோடு பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் தோட்டத்துக்குள்ளும் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும் மிதித்தும் நாசப்படு்த்தியது.

இதை கவனித்ததும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு வந்து பட்டாசு வெடித்தும், தீப்பந்தங்களை காட்டியும் ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அந்த யானை தோட்டத்துக்குள்ளே சுற்றி வந்தது. 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அந்த யானை நேற்று காலை 4 மணி அளவில் பவானிசாகர் வனப்பகுதிக்குள் சென்றது.

ஒற்ைற யானை புகுந்து அட்டகாசம் செய்ததில் சிவராஜ் தோட்டத்தில் 50 வாழைகளும், ராமசாமி ேதாட்டத்தில் 100 வாழைகளும் மொத்தம் 150 வாழைகள் நாசம் ஆனது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘தொடர்ந்து 3 நாட்களாக ஒற்றை ஆண் யானை இங்குள்ள தோட்டங்களில் புகுந்து வாழைகளை தின்று அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே தோட்டத்துக்குள் யானை, புகாதாவாறு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். யானையால் சேதப்படுத்தப்பட்ட வாழைகளுக்கு உண்டான உரிய இழப்பீட்டு தொைகயை விவசாயிகளுக்கு வழங்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Next Story