விடுதியை மாணவிகள் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுரை
விடுதியை மாணவிகள் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை வழங்கினார்.
தஞ்சாவூர்,
தஞ்சையில் உள்ள குந்தவை நாச்சியார் கல்லூரியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி கட்டிடம் மற்றும் வளாகத்திற்குள் டெங்கு கொசு புழுக்கள் தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் அண்ணாதுரை நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் விடுதி கட்டிட அறைகள் மற்றும் வளாகத்தினை தூய்மையாக பராமரித்து தண்ணீர் தேங்காதவாறு பார்த்துகொள்ளும்படி விடுதி காப்பாளரை அறிவுறுத்தினார்.
மேலும், மாணவிகள் விடுதியின் சமையல் கூடம், உணவு கூடம், மொட்டை மாடி, கழிவறை, சுற்றுபுறம் ஆகியவற்றை சுகாதாரமாக வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் மாணவிகள் விடுதியில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டியை 2 வாரங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யுமாறும், தண்ணீரை குளோரினேஷன் செய்யுமாறும் அறிவுறுத்தினார்.
தூய்மையாக வைக்க வேண்டும்
பின்னர் விடுதியில் தங்கி பயிலும் கல்லூரி மாணவிகளிடம், விடுதியை தூய்மையாக வைத்து கொள்வதன் அவசியம் குறித்து கலெக்டர் எடுத்துரைத்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளங்கோ, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) ரவீந்திரன், மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story