தஞ்சை விமானப்படை நிலையத்துக்கு தென்னக தலைமை அதிகாரி வருகை


தஞ்சை விமானப்படை நிலையத்துக்கு தென்னக தலைமை அதிகாரி வருகை
x
தினத்தந்தி 16 Oct 2019 4:30 AM IST (Updated: 16 Oct 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை விமானப்படை நிலையத்துக்கு தென்னக விமானப்படை தலைமை அதிகாரி சுரே‌‌ஷ் வருகை தந்தார்.

தஞ்சாவூர்,

தென்னக விமானப்படை நிலைய தலைமை அதிகாரி சுரே‌‌ஷ், தஞ்சையில் உள்ள விமானப்படை நிலையத்துக்கு வந்தார். அவரை தஞ்சை விமானப்படை நிலைய குரூப் கேப்டன் பிரஜூவல்சிங் வரவேற்றார். அவர் தஞ்சை விமானப்படை நிலைய வீரர்களின் அணிவகுப்பையும் பார்வையிட்டார்.

பின்னர் அதிகாரி சுரே‌‌ஷ், தஞ்சை விமானப்படை நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விமான ஓடுதளத்தையும் அவர் பார்வையிட்டார். அப்போது அவர், தென்பிராந்தியத்தில் முதன்மையான போர் விமான தளங்களில் ஒன்றாக தஞ்சை விமானப்படை நிலையத்தில் நடைபெறும் பணிகள் மற்றும் சேவைகளை பாராட்டினார்.

அர்ப்பணிப்பு உணர்வு

பின்னர் அவர் ஊழியர்களுடன் உரையாடிய போது, ‘‘வளங்களை மேம்படுத்துவது, செயல்பாட்டு நிபுணத்துவம், தொழில்முறை திறன் குறித்த மேம்படுத்தப்பட்ட முயற்சி ஆகியவற்றுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்’’ என்றார்.

முன்னதாக விமானப்படை மனைவிகள் நல சங்கத்தின் தலைவி ராதாசுரேசை, தஞ்சை விமானப்படை மனைவிகள் நல சங்கத்தின் தலைவி வந்தனாசிங் வரவேற்றார்.

Next Story