ஜவ்வாதுமலையில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை - சப்-கலெக்டர் விசாரணை
ஜவ்வாதுமலையில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருப்பத்தூர் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள ஜவ்வாதுமலை ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் குமரேசன் (வயது 28). இவருக்கும், புதூர்நாடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகள் நதியா (24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லட்சுமணனுக்கு சொந்தமான கிணற்றில் நதியா குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நதியாவின் தாய் பார்வதி திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், திருப்பத்தூர் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story