அரசு பள்ளியில் அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் மனு


அரசு பள்ளியில் அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 16 Oct 2019 4:00 AM IST (Updated: 16 Oct 2019 2:57 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளியில் அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனுகொடுத்தனர்.

சிவகங்கை,

திருப்பாச்சேத்தி அருகே சலுப்பனோடை கிராம மக்கள் கலெக்டர் ஜெயகாந்தனிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:- சலுப்பனோடை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு சலுப்பனோடை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்தநிலையில் இந்த பள்ளி வளாகத்தில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. மேலும், பள்ளி வகுப்பறைக் கட்டிடத்தில் தரைத்தளம் பெயா்ந்துள்ளதால், மாணவா்கள் தரையில் அமா்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், மாணவ-மாணவிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனா்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, சலுப்பனோடை பள்ளியில் ஆழ்துளைக் கிணற்றுடன் கூடிய குடிநீர் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தர வேண்டும். மேலும், பள்ளி வகுப்பறைக் கட்டிடத்தில் சேதமடைந்துள்ள தரைத்தளத்தை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என அதில் கூறியிருந்தனர்.

Next Story