விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்கு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்கு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.
விழுப்புரம்,
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி 275 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 24-ந் தேதி நடைபெறுகிறது.
இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன், தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களான கவுதமன், எஸ்.சதீஷ், ஆர்.சதீஷ், சுபாகர், செந்தில்குமார், தங்கராசு, தாமோதரன், முருகன், ரவிக்குமார் ஆகிய 12 பேர் களத்தில் உள்ளனர். இவர்கள் 12 பேருக்கும், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட கடந்த 3-ந் தேதி மாலையே உடனடியாக சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த தேர்தலில் பயன்படுத்த வாக்குச்சாவடி மையங்களுக்கு 344 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 344 கட்டுப்பாட்டு கருவிகளும், 358 வி.வி.பேட் கருவிகளும் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இவை அனைத்தும் ஏற்கனவே விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலகமான தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் ஆகியவை பொருத்தும் பணி நடந்தது. இப்பணியில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் அதிகாரிகள் பலர் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story