கன்னியாகுமரியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் சந்திப்பு


கன்னியாகுமரியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் சந்திப்பு
x
தினத்தந்தி 17 Oct 2019 3:30 AM IST (Updated: 16 Oct 2019 8:09 PM IST)
t-max-icont-min-icon

20 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் சந்திப்பு நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடந்தது.

கன்னியாகுமரி,

மத்திய பிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் உள்ள ராணுவ பாதுகாப்பு கணக்குகள் துறையில் பணிபுரிந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அதிகாரிகள் இணைந்து, “ஜபல்பூர் ஜாம்பவான்ஸ்” என்ற பெயரில் அமைப்பு நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பில் உள்ள அதிகாரிகள், தங்கள் குடும்பத்தினருடன் ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்து வருகிறார்கள். அதன்படி, நேற்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திராவில் சந்தித்தனர்.

இந்தநிகழ்ச்சியில், பாதுகாப்பு கணக்குகள் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற குமார், பெவகார் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள், தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தாங்கள் பணியாற்றிய அனுபவம், நாட்டின் முக்கிய நிகழ்வுகளில் பணிபுரிந்த விதம் போன்ற பழைய நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.

புகைப்படம்

முன்னதாக, அவர்கள் கன்னியாகுமரியில் பல்வேறு முக்கிய சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்து, குடும்பத்தினருடன் குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர். ேமலும், சந்திப்பு நிகழ்ச்சியில் இந்தி, ஆங்கிலத்தில் பாட்டு பாடி, நடனம் ஆடி மகிழ்ந்தனர்.


Next Story