மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரியலூர்,
மத்திய அரசை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் உலகநாதன் (இந்திய கம்யூனிஸ்டு), மணிவேல் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி துரைசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பத்மாவதி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். ரெயில்வே, தொலை தொடர்பு, நிலக்கரி சுரங்கம் ஆகியவற்றை தனியார் மயமாக்க கூடாது. வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும். முதியோர், விதவைகள் ஓய்வூதியத்தை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Related Tags :
Next Story