வங்கி கொள்ளையில் வாலிபர் கைது: மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றிய போலீசார்
வங்கி கொள்ளையில் வாலிபர் கைது: மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றிய தனிப்படை போலீசார்.
சமயபுரம்,
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 470 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் உத்தரவிட்டார். அதன்பேரில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில், தனிப்படை போலீசார் விஜயகுமார், ஹரிஹரன் உள்ளிட்டோர் பெங்களூரு, கோவா உள்பட பல்வேறு இடங்களிலும் கொள்ளையர்களை தேடி வந்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கில் கொள்ளையர்கள் பிடிபட்டால் கோவிலில் முடி காணிக்கை செலுத்துவதாக தனிப்படை போலீஸ்காரர்கள் விஜயகுமார், ஹரிஹரன் ஆகியோர்வேண்டி இருந்தனர்.
இந்தநிலையில் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்தவர்கள் தான், பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வங்கி கொள்ளை தொடர்பாக வாலிபர் ராதாகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீஸ்காரர் விஜயகுமார் கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவிலிலும், ஹரிஹரன் சமயபுரம் கோவிலிலும் மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

Related Tags :
Next Story