மண்டபம் ரெயில்வே பீடர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க த.மு.மு.க. எதிர்ப்பு


மண்டபம் ரெயில்வே பீடர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க த.மு.மு.க. எதிர்ப்பு
x
தினத்தந்தி 17 Oct 2019 4:30 AM IST (Updated: 16 Oct 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

மண்டபம் ரெயில்வே பீடர் பகுதியில் டாஸ்டாக் கடை அமைக்க த.மு.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பனைக்குளம்,

த.மு.மு.க. சார்பில் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் பரக்கத்துல்லா மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் முன்பு 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. அந்த பகுதியில் ரெயில் நிலையம், மருத்துவமனை, மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் அந்த வழியாகத்தான் சென்று வந்தனர்.

இந்த மதுபான கடைகளில் மது அருந்துபவர்கள் போதையில் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்தனர். அதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து நடத்திய மிகப்பெரிய போராட்டம் காரணமாக உடனடியாக அந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில் தற்போது அதே பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் அமைதி பாதிக்கப்படும்.

மேலும் இளைஞர்கள், மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகும் வாய்ப்பு ஏற்படும். எனவே எதிர்கால நலன்கருதி இந்த டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story