காஞ்சீபுரத்தில் கொள்ளையடிக்க திட்டம்; 10 ரவுடிகள் கைது


காஞ்சீபுரத்தில் கொள்ளையடிக்க திட்டம்; 10 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 17 Oct 2019 4:15 AM IST (Updated: 16 Oct 2019 11:09 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையம் மற்றும் கவுரி அம்மன் பேட்டை போன்ற இடங்களில் ஒரு கும்பல் அமர்ந்து கொண்டு கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிஷோர், தர்மலிங்கம் மற்றும் போலீசார் அந்த பகுதிகளுக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு இருந்த 10 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், காஞ்சீபுரம் கோனேரிகுப்பம் இலுப்பை தோப்பு ெ- தருவை சேர்ந்த இம்மானுவேல் (வயது 24), காஞ்சீபுரம் அடுத்த வேடல் பகுதியை சேர்ந்த முரளி (25), காஞ்சீபுரம் அடுத்த சிருவெடல் கிராமத்தை சேர்ந்த ஜீவா (25), காஞ்சீபுரம் அடுத்த அதிகாரத்தை சேர்ந்த வசந்த ராஜ் (24), காஞ்சீபுரம் காலண்டர் தெருவை சேர்ந்த சரவணன் (23 ), காஞ்சீபுரம் அப்பாராவ் தெருவை சேர்ந்த பிரகாஷ் (23), காஞ்சீபுரத்தை சேர்ந்த சூர்யா (20) மற்றும் 18 வயதான 3 பேர் என்பது தெரியவந்தது.

ஏற்கனவே அவர்கள் வழிப்பறி, அடிதடி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 கத்திகள், 6 உருட்டுக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Next Story