ஒரகடம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


ஒரகடம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 17 Oct 2019 4:00 AM IST (Updated: 16 Oct 2019 11:11 PM IST)
t-max-icont-min-icon

ஒரகடம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

படப்பை,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் நந்திஸ்வர மஸ்கரம் கிராமம் திடீர் குப்பம் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 25). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடகால் பகுதியில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த சக ஊழியர்கள் மணிகண்டனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story