மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 17 Oct 2019 4:15 AM IST (Updated: 17 Oct 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகும் போக்கை கைவிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும். 100 நாள் வேலையை அனைத்து நகர பகுதியிலும் விரிவுபடுத்த வேண்டும். அனைத்து விவசாய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாகை அவரித்திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகை மாலி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். செல்வராஜ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

கோ‌‌ஷங்கள்

இதில் மாவட்ட இணை செயலாளர் நாராயணன், செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌‌ஷங்களை எழுப்பினர்.


Next Story