கார்த்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்


கார்த்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 16 Oct 2019 10:30 PM GMT (Updated: 16 Oct 2019 7:15 PM GMT)

கார்த்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் சிக்கலில் வேல்நெடுங்கன்னியம்மன், நவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் உள்ள சிங்காரவேலருக்கு நேற்று புரட்டாசி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி மாவு, பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

எட்டுக்குடி

இதேபோல் எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோவிலில் கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி மாவு, பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மேலும் நாகை குமரன் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியசாமி உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில் களிலும் புரட்டாசி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Next Story