பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து உப்பாறு அணைக்கு உபரிநீரை வழங்க வேண்டும்; தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை
பி.ஏ.பி.வாய்க்காலில் இருந்து உப்பாறு அணைக்கு உபரிநீரை வழங்க வேண்டும் என்று தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தாராபுரம்,
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை, கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இந்த அணைக்கு உட்பட்டு நேரடியாக 6 ஆயிரம் ஏக்கர் பாசனமும், மறைமுகமாக 5 ஆயிரம் ஏக்கர் பாசனமும் இருந்து வந்தது. இது தவிர அணையை அடுத்துள்ள 5 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவைக்கும் உப்பாறு அணை ஆதாரமாகவும் இருந்து வந்தது.
இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்வதில்லை. இதனால் அணைக்கு நீர் வரத்தும் இல்லை. தண்ணீர் கிடைக்காததால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை நம்பியிருந்த விவசாயிகள் பலர், இடம் பெயர்ந்து விட்டனர். தற்போதுள்ள விவசாயிகள் கால்நடைகளை நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்னும் போதுமான மழை பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. விவசாய கிணறுகளும், ஆழ்குழாய் கிணறுகளும் தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டது. தற்போது அணைக்கு உட்பட்ட 5 ஊராட்சிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கால்நடை வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உப்பாறு பாசன விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே உப்பாறு அணைக்கு உட்பட்ட பாசன பகுதிகளில் வறட்சியைப் போக்கவும், குடிநீர் தேவைக்காகவும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில், அதன் உபரி நீரை உப்பாறு அணைக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து நேற்று உப்பாறு பாசன விவசாயிகள் தமிழக கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் காளிமுத்து தலைமையில், தாராபுரத்தில் சப்-கலெக்டர் பவன்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தற்போது பெய்துவரும் பருவமழையின் காரணமாக சோலையாறு, பரம்பிக்குளம், பெருவாரிபள்ளம் மற்றும் திருமூர்த்தி அணை ஆகியவற்றில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் பி.ஏ.பி பாசனப் பகுதிகளில் பரவலாக மழையும் பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பி.ஏ.பி.கால்வாயின் தண்ணீர் வீணாக வெளியேறுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் பி.ஏ.பி.கால்வாயின் பாசனத்திட்டத்தில் இருந்த சுமார் 10 ஆயிரம் ஏக்கர்நிலம் விவசாயத்திலிருந்து விடுபட்டுள்ளது. எனவே உப்பாறு பாசன விவசாயிகளுக்கு உயிர் தண்ணீர் கிடைக்கும் வகையில், பி.ஏ.பி.கால்வாயின் உபரி நீரை, பிரதான கால்வாயின் அரசூர் பகுதியிலிருந்து உப்பாறு அணைக்கு திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உப்பாறு பாசன கால்வாய்களை குடிமராமத்து திட்டத்தில் உடனடியாக தூர்வார வேண்டும்..
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story