மஞ்சாநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


மஞ்சாநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 16 Oct 2019 10:30 PM GMT (Updated: 16 Oct 2019 8:28 PM GMT)

மஞ்சாநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளியணை,

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே மஞ்சாநாயக்கன்பட்டியில் பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை நடத்த கிராம மக்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு ஊர் பொதுக்கிணற்றில் கரகம் பாலிக்கப்பட்டு மேள தாளம் வாத்தியங்கள் முழங்க வான வேடிக்கையுடன் கோவிலுக்கு கரகத்தை பக்தர்கள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் முத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நேர்த்திக்கடன்

தொடர்ந்து நேற்று திரளான பக்தர்கள் கோவிலில் ஒன்று கூடி பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராடுதல் மற்றும் கரகம் பொதுக்கிணற்றில் விடுதலுடன் திருவிழா முடிவடைகிறது. திருவிழாவையொட்டி கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமை சிவலிங்கம்பிள்ளை தலைமையில் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Next Story