மாவட்ட செய்திகள்

அதிக போதைக்காக மதுவில் கொக்குமருந்து கலந்து குடித்தவர் பலியான பரிதாபம் + "||" + For more addictive In Wine Crane medicine Mixer Kills Pity

அதிக போதைக்காக மதுவில் கொக்குமருந்து கலந்து குடித்தவர் பலியான பரிதாபம்

அதிக போதைக்காக மதுவில் கொக்குமருந்து கலந்து குடித்தவர் பலியான பரிதாபம்
வேலூர் அருகே அதிக போதைக்காக மதுவில் கொக்கு மருந்து கலந்து குடித்தவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேலூர், 

வேலூரை அடுத்த பொய்கை மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன்கள் கார்த்தி (வயது35), வேலு. அண்ணன், தம்பிகளான இவர்கள் இருவருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. தினமும் மதுகுடித்து வந்துள்ளனர்.

இவர்கள் மதுகுடிக்கும்போது அதிக போதை இருக்கவேண்டும் என்பதற்காக, விவசாய நிலங்களில் கொக்கு வராமல் இருக்க வைக்கப்படு்ம் மருந்தை, மதுவில் கலந்து குடித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் வழக்கம்போல நேற்று முன்தினமும் மது குடித்துள்ளனர்.

அங்குள்ள புத்தூர் ஏரிக்கால்வாய் பகுதியில் அமர்ந்து மதுகுடித்துள்ளனர். அப்போது அவர்கள் மதுவில் கொக்கு மருந்து கலந்துள்ளனர். ஆனால் வழக்கத்தைவிட அதிக அளவில் கொக்கு மருந்தை கலந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த மதுவை குடித்த அண்ணன், தம்பிகளான கார்த்தி, வேலு ஆகிய இருவரும் மயங்கி விழுந்தனர். இதைபார்த்த பொதுமக்கள் அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கார்த்தி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு
ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழந்தார். அவரது கணவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர்தப்பினார்.
2. எட்டயபுரம் அருகே, கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்; வாகன புகை பரிசோதனை மைய உரிமையாளர் பலி
எட்டயபுரம் அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் வாகன புகை பரிசோதனை மைய உரிமையாளர் பலியானார்.
3. ராஜாக்கமங்கலம் அருகே உப்பளத்தில் கார் பாய்ந்தது; என்ஜினீயர் பலி 2 பேர் படுகாயம்
ராஜாக்கமங்கலம் அருகே உப்பளத்தில் கார் பாய்ந்த விபத்தில் என்ஜினீயர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
4. எடப்பாடி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து செல்போன் கடை உரிமையாளர் பலி நண்பர்கள் 2 பேர் படுகாயம்
எடப்பாடி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து செல்போன் கடை உரிமையாளர் பலியானார். மேலும் அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. மண்டபம் அருகே விபத்து: பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி
மண்டபம் அருகே பாலத்தில் மோட்டார்சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியாயினர்.