திசையன்விளை அருகே மாயமான 12 வயது சிறுமி அடித்துக்கொலை


திசையன்விளை அருகே மாயமான 12 வயது சிறுமி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 17 Oct 2019 4:15 AM IST (Updated: 17 Oct 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே மாயமான 12 வயது சிறுமி அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திசையன்விளை, 

திசையன்விளை அருகே உள்ள உவரியை அடுத்த கூத்தப்பனையை சேர்ந்த லிவிங்ஸ்டன் மகள் இளவரசி(வயது12). இவள் அங்குள்ள நடுநிலைப்பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மாலையில் இவள் வீட்டிலிருந்து கடைக்கு சென்றவர் திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவில் வீட்டுக்கு அருகிலுள்ள காம்பவுண்டு சுவருக்கு பின்பகுதியில் பலத்த காயங்களுடன் அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். அவர் கடத்தி செல்லப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டு, அந்த பகுதியில் பிணமாக வீசப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தகவல் அறிந்த உவரி போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் உவரி போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story