மக்கள் தொகை கணக்கெடுப்பது போல் நடித்து வீடுகளில் நகை, பணம் திருட்டு; மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 3 பேர் கைது
மக்கள் தொகை கணக்கெடுப்பது ேபால் நடித்து வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை ஏமாற்றி நகை, பணத்தை திருடிய மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 3 பேைர போலீசார் கைது செய்தனர்.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக 3 பெண்கள் வீடு வீடாக சென்று மக்கள் தொகை கணக்கு எடுப்பது போல் நடித்து நகை, பணம் உள்ளிட்டவைகளை திருடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. இதையடுத்து அந்த பெண்களை பிடிப்பதற்காக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்தநிலையில் தேவகோட்டை அருகே சடையன்காடு கிராமத்தை சேர்ந்த செல்வி என்பவரது வீட்டில் இந்த பெண்கள் அவரை ஏமாற்றி பணம் திருட முயன்றனர். இதை கவனித்த செல்வி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து ஆறாவயல் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் சிவகங்கை காமராஜ் நகரை சேர்ந்த பூமயில்(வயது 36), ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த பரமேஸ்வரி(49), சிவகங்கை வீரவலசை கிராமத்தை சேர்ந்த ராணி(48) என்பது தெரியவந்தது. இந்த பெண்கள் சிவகங்கையில் மகளிர் சுயஉதவிக்குழுவில் உறுப்பினராக இருந்தபோது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சேர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணிடம் பேச்சு கொடுப்பார்கள்.
பின்னர் குடிக்க தண்ணீர் கேட்பார்கள். அந்த பெண் தண்ணீர் எடுத்து வருவதற்குள் 3 பெண்களில் ஒருவர் நைசாக பேசி மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அந்த வீட்டின் பெண்ணிடம் கொடுத்து குடிக்க சொல்வார்கள். அதை வாங்கி குடிக்கும் பெண் மயக்கம் போட்டு விழுந்ததும் அந்த வீட்டில் உள்ள நகை, பணம் மற்றும் மயங்கி விழுந்த பெண்ணின் கழுத்தில் கிடக்கும் நகைகள் ஆகியவற்றை திருடி கொண்டு தப்பிவிடுவார்கள். இதேபோல் தேவகோட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் இந்த பெண்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அந்த 3 பெண்களை கைது செய்து தேவகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story