திருவள்ளூர் போலீஸ் என்று கூறி முதியவரிடம் பணம் பறித்தவர் கைது


திருவள்ளூர்  போலீஸ் என்று கூறி முதியவரிடம் பணம் பறித்தவர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2019 3:45 AM IST (Updated: 18 Oct 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் என்று கூறி முதியவரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

பள்ளிப்பட்டு,

ஆந்திர மாநிலம் ராஜாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சே‌ஷய்யா (வயது 70). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜவலசை கிராமத்தில் உள்ள ஆந்திர வங்கியில் ரூ.25 ஆயிரத்தை எடுத்து கொண்டு தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் தன்னை போலீஸ் என்று கூறிக்கொண்டு அவரிடம் இருந்த கைப்பையை வாங்கி அதை சோதனை செய்தார்.

அதில் இருந்த ரூ.25 ஆயிரத்தை பறித்து கொண்டு சென்றுவிட்டார். இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசில் சே‌ஷய்யா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சே‌ஷய்யா நேற்று முன்தினம் ஆர்.கே.பேட்டையில் நடைபெறும் வார சந்தைக்கு சென்று இருந்தார். அப்போது தன்னிடம் பணம் பறித்த மர்ம நபரை அவர் பார்த்தார்.

உடனடியாக அவர் ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். பணத்தை பறித்தவர் வெள்ளாத்தூர் காலனியை சேர்ந்த சாமுவேல் (48) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story