மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளரின் கார் தீ வைத்து எரிப்பு? போலீசார் விசாரணை + "||" + Fire in the car of Hindu front district secretary in Pudukkottai Police are investigating

புதுக்கோட்டையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளரின் கார் தீ வைத்து எரிப்பு? போலீசார் விசாரணை

புதுக்கோட்டையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளரின் கார் தீ வைத்து எரிப்பு? போலீசார் விசாரணை
புதுக்கோட்டையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளரின் கார் நேற்று மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. கார் தீ வைத்து எரிக்கப்பட்டதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட நிஜாம் காலனி பேலன்ஸ் நகரை சேர்ந்தவர் வீரவடிவேல். இவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் காரில் சொந்தவேலை காரணமாக வெளியே சென்று வந்தார். பின்னர் காரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, இரவு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் வீரவடிவேலின் கார் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.


இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் இது குறித்து வீரவடிவேலுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வீரவடிவேல் புதுக்கோட்டை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அக்கம், பக்கத்தினர் உதவியுடன் காரில் எரிந்து கொண்டு இருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், காரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

தீ வைத்து எரிப்பு?

இருப்பினும் காரின் முன் பகுதி முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கணே‌‌ஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக கார் மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக உளவுத்துறை சரியில்லை

இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் புதுக்கோட்டைக்கு வந்து வீரவடிவேலின் எரிந்த காரை பார்வையிட்டார். பின்னர் சம்பவம் குறித்து வீரவடிவேலிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் தீவிரவாதம் பரவி கொண்டிருக்கிறது. தமிழக உளவுத்துறை சரியில்லை. நல்ல அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும். தீவிரவாதம் தொடர்பாக இதுவரை என்.ஐ.ஏ. தான் 133 பேரை கைது செய்தது.

இதில் 33 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். வீரவடிவேலுக்கு மிரட்டல் வந்துள்ளது. அவருக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கு - 11 தனிப்படைகள் அமைப்பு
திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
2. சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் : போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது- மதுரை ஐகோர்ட் கிளை
சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது என்று மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
3. சீர்காழியில் படுகாயத்துடன் வீட்டில் பிணமாக கிடந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி கொலையா? போலீசார் விசாரணை
சீர்காழியில் ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி வீட்டில் படுகாயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள், விழுப்புரம் நகருக்குள் வர தடை போலீசார் தீவிர சோதனை
வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் விழுப்புரம் நகருக்குள் வர போலீசார் தடை விதித்து தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
5. காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் கள்ளச்சாவி போட்டு மர்ம நபர்கள் 30 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.