பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
பவானிசாகர்,
பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 105 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழை நீர் அணைக்கு வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் மற்றும் கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 689 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 96.63அடியாக இருந்தது. அணையில் இருந்து காலி்ங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நேற்று மாலை அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரித்தது. 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 749கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டமும் சற்று அதிகரித்து 97.16அடியை தொட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 க னஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
Related Tags :
Next Story