மாவட்ட செய்திகள்

காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா ஆய்வு + "||" + Collector santa review of treatments for fever

காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா ஆய்வு

காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா ஆய்வு
நோயாளிகளுக்கு டாக்டர்களால் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்,

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு என சிறப்பு வார்டுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு நோயாளிகளுக்கு டாக்டர்களால் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் நோயாளிகளிடம் டாக்டர்கள் உரிய சிகிச்சைகள் அளிக்கிறார்களா? என்று கேட்டறிந்தார். மேலும் அவர் டாக்டர்களிடம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சையளிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து கலெக்டர் சாந்தா பதிவேடுகள் வைப்பறைக்கு சென்று அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேனை பார்வையிட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார். பின்னர் பூலாம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற கலெக்டர் சாந்தா, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.


ஆய்வின்போது இணை இயக்குனர் (பொறுப்பு) இளவரசன், துணை இயக்குனர் (பொறுப்பு) ஹேமந்காந்தி, பெரம்பலூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தர்மலிங்கம், இருக்கை மருத்துவ அதிகாரி (பொறுப்பு) சரவணன், டாக்டர்கள் கலைமணி, மனோஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரியை கலெக்டர் ஆய்வு
மேச்சேரி எம்.காளிப்பட்டி ஏரியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
2. ஊட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை மாற வேண்டும் கலெக்டர் பேச்சு
குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை மாற வேண்டும் என்று ஊட்டியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பேசினார்.
3. பவானி கட்டளை கதவணை மின்நிலைய இணைப்பு சாலையில் மீண்டும் மண்சரிவு கலெக்டர் பார்வையிட்டார்
பவானி கட்டளை கதவணை மின்நிலைய இணைப்பு சாலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டார்.
4. வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
5. இந்தியாவில் காற்று மாசால் இதய பாதிப்பு, ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகம்; ஆய்வில் தகவல்
இந்தியாவில் காற்று மாசால் இதய பாதிப்பு மற்றும் ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகமுள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.