திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.27 கோடி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.27 கோடி
x
தினத்தந்தி 18 Oct 2019 3:15 AM IST (Updated: 18 Oct 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.27 கோடி கிடைத்தது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதத்துக்கான (அக்டோபர்) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கோவில் செயல் அலுவலர் அம்ரித் தலைமை தாங்கினார். கோவில் தக்காரின் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர்கள் ரோஜாலி சுமதா, செல்வராஜ், கோவில் ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவார பணிக்குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்கள், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் கோவில் நிரந்தர உண்டியல்களில் ரூ.1 கோடியே 25 லட்சத்து 48 ஆயிரத்து 321-ம், மேல கோபுர திருப்பணி உண்டியலில் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 538-ம் என மொத்தம் ரூ.1 கோடியே 27 லட்சத்து 859-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

மேலும் தங்கம் 780 கிராமும், வெள்ளி பொருட்கள் 16 கிலோ 700 கிராமும் காணிக்கையாக கிடைத்தன.

Next Story