மாவட்ட செய்திகள்

எச்.விஸ்வநாத் விலைபோனது அனைவருக்கும் தெரியும் - குமாரசாமி பேட்டி + "||" + Everyone knows what H. Viswanath is worth - Interview with Kumaraswamy

எச்.விஸ்வநாத் விலைபோனது அனைவருக்கும் தெரியும் - குமாரசாமி பேட்டி

எச்.விஸ்வநாத் விலைபோனது அனைவருக்கும் தெரியும் - குமாரசாமி பேட்டி
சாமுண்டீஸ்வரி கோவிலில் அரங்கேறிய நாடகம் தேவையற்றது என்றும், எச்.விஸ்வநாத் விலைபோனது அனைவருக்கும் தெரியும் என்றும் குமாரசாமி கூறினார்.
பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கடவுள் முன்பு சத்தியம் செய்வதாக சிலர்(தகுதி நீக்க எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத்) கூறினர். சாமுண்டீஸ்வரி கோவிலில் வைத்து சத்தியம் செய்வதாக கூறுவது தவறு. கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இவ்வாறு சொல்வார்கள். முன்பு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, கோவிலில் சத்தியம் செய்வது தொடர்பாக எனக்கும், எடியூரப்பாவுக்கும் இடையே பிரச்சினை வந்தது.

தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு வந்த எடியூரப்பா சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார். நான் அந்த கோவிலில் சத்தியம் செய்துவிட்டு வந்தேன். இது நடந்த சில மாதங்களில் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை இழந்தார். அவரால் கடவுளின் பார்வையில் இருந்து தப்ப முடியவில்லை.

எச்.விஸ்வநாத் பற்றி சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ. கூறிய கருத்து உண்மையானது. எச்.விஸ்வநாத் விலைபோனது அனைவருக்கும் தெரியும். அவர் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதும் தெரிந்த விஷயம். அவரை பற்றி சா.ரா.மகேஷ் அதிகமாக பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாமுண்டீஸ்வரி கோவிலில் இன்று (அதாவது நேற்று) அரங்கேறிய நாடகம் தேவையற்றது. எச்.விஸ்வநாத் பற்றி உன்சூர் தொகுதி மக்கள் முடிவு செய்வார்கள். அவர் தான் ஒரு அரிச்சந்திரன் என்று நினைத்து கொண்டிருக்கிறார். அவருக்கு சாமுண்டீஸ்வரி தாய், உரிய பாடம் புகட்டுவார்.

சா.ரா.மகேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது உண்மை தான். இதுகுறித்து சபாநாயகரிடம் நான் பேசினேன். நானும், சா.ரா.மகேசும் பிரிந்த சகோதரர்களை போல் இருக்கிறோம். அவரது நேர்மை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அவர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர். ராஜினாமாவை வாபஸ் பெறுமாறு அவரிடம் நான் கூறியுள்ளேன். பசவராஜ் ஹொரட்டி உள்ளிட்ட எங்கள் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.சி.க்கள் ரகசியமாக கூட்டம் நடத்தி இருப்பதாக அறிந்தேன்.

எனது தலைமை மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், தலைமை பதவியை தியாகம் செய்ய நான் தயாராக உள்ளேன். நான் அனைவரையும் மரியாதையாக நடத்துகிறேன். இதற்கு யாரிடமும் நான் சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை. தேவேகவுடாவுடன் பேசி புதிய தலைமையை அவர்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சி.பி.ஐ. விசாரணையை கண்டு பயப்படவில்லை; முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி
தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை கண்டு பயப்படவில்லை என்று குமாரசாமி கூறினார்.
2. கர்நாடகத்தில் புதிய அரசியல் நாடகங்கள் அரங்கேறும்; குமாரசாமி கணிப்பு
சட்டசபை இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு கர்நாடகத்தில் புதிய அரசியல் நாடகம் அரங்கேறும் என்று குமாரசாமி கூறினார்.
3. 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் பட்டியல் 2 நாளில் வெளியீடு
15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் பட்டியல் 2 நாளில் வெளியிடப்படும் என்று குமாரசாமி கூறினார்.
4. எதிர்க்கட்சி தலைவர்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி; குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
எதிர்க்கட்சி தலைவர்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
5. நில முறைகேடு வழக்கு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு நோட்டீசு
கர்நாடகத்தில் குமாரசாமி கடந்த 2007-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்தபோது, அரசு நிலத்தை அரசாணையில் இருந்து விடுவித்து முறைகேடு செய்ததாக அவர் மீது லோக்அயுக்தா கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.