நகரமயமாக்கலை வளர்ச்சிக்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும்; முதல்-மந்திரி பட்னாவிஸ் பேச்சு


நகரமயமாக்கலை வளர்ச்சிக்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும்; முதல்-மந்திரி பட்னாவிஸ் பேச்சு
x
தினத்தந்தி 18 Oct 2019 12:08 AM GMT (Updated: 18 Oct 2019 12:08 AM GMT)

அமராவதியில் பா.ஜனதா -சிவசேனா கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாக்பூர், 

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நகரங்கள் 65 சதவீத பங்களிப்பை அளிக்கின்றன. நகரங்கள் தான் வளர்ச்சிக்கான என்ஜின்கள். எனவே நகரமயமாக்கல் வளர்ச்சிக்கான வாய்ப்பாக பார்க்கப்பட வேண்டும். நகரங்களின் வளர்ச்சியையும், நகரமயமாக்கலையும் மாநில அரசு துரிதப்படுத்தி வருகிறது. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு நகரங்களை மேம்படுத்தி வருகிறோம். பாதாள சாக்கடை, குடிநீர், சாலை உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் நவீன நகரங்களில் ஒன்றாக அமராவதி மாறும். முந்தைய 15 ஆண்டுகால காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடுகையில் தற்போதைய பா.ஜனதா -சிவசேனா கூட்டணி ஆட்சியில் வளர்ச்சிப் பணிகள் இரட்டிப்பு ஆக்கப்பட்டு உள்ளன.

நகரங்களில் குடிசைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு குடிசைவாசிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. முதலீடு மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் கல்வித்துறையிலும் மாநிலம் முதலிடம் பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story