நாளை மறுநாள் நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் - கலெக்டர் தகவல்


நாளை மறுநாள் நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 Oct 2019 9:30 PM GMT (Updated: 18 Oct 2019 1:07 PM GMT)

நாளை மறுநாள் நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 275 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது. இதற்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை உள்ள வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்கும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள் அவர்களின் அடையாளத்தை மெய்பிப்பதற்காக மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

அதாவது பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், புகைப்படத்துடன் கூடிய வங்கி, தபால் கணக்கு புத்தகங்கள், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story