வண்டிகாளியம்மன், விநாயகர் கோவில்களின் நிர்வாகத்துக்கு, வாடகை செலுத்தாத ஓட்டல், கடைகளுக்கு ‘சீல்’


வண்டிகாளியம்மன், விநாயகர் கோவில்களின் நிர்வாகத்துக்கு, வாடகை செலுத்தாத ஓட்டல், கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 18 Oct 2019 10:45 PM GMT (Updated: 18 Oct 2019 7:22 PM GMT)

வண்டிகாளியம்மன், விநாயகர் கோவில்களின் நிர்வாகத்துக்கு வாடகை செலுத்தாத ஓட்டல், கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் வண்டிகாளியம்மன் கோவில், கலைக்கோட்டு விநாயகர் கோவில் ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான இடத்தில் கடைகள், ஓட்டல், ஒர்க்‌ஷாப் அமைக்கப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கடைகள், ஓட்டல், ஒர்க்‌ஷாப் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்தவர்கள், கடந்த பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர்.

இதையடுத்து நிலுவையில் உள்ள வாடகை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையென்றால் அவற்றை காலி செய்ய வேண்டும் என்று கோவில்களின் நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் வாடகையை செலுத்தாததோடு கடைகள், ஓட்டல், ஒர்க்‌ஷாப் கடைகள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்தனர்.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையில் செயல் அலுவலர் சுகன்யா, மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவில் ஆணையர் நரசிம்மன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கடைகள், ஓட்டல், ஒர்க்‌ஷாப் ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மீட்கப்பட்டது. பின்னர் அவற்றுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 2 கோவில் நிர்வாகங்களுக்கு சொந்தமான 2 கடைகள், ஒரு ஓட்டல், ஒரு ஒர்க்‌ஷாப் ஆகியவற்றுக்கு ரூ.25 லட்சத்துக்கு மேல் வாடகை பாக்கி இருந்தது. வாடகைதாரர்கள் இந்த தொகையை செலுத்தாமல் ஆக்கிரமிப்பு செய்ததால் அவை மீட்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

Next Story