மாவட்ட செய்திகள்

குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் நிலுவை தொகை வழங்கக்கோரி போராட்டம் + "||" + Farmers who came to the grievance meeting Struggle to pay arrears

குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் நிலுவை தொகை வழங்கக்கோரி போராட்டம்

குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் நிலுவை தொகை வழங்கக்கோரி போராட்டம்
குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் நிலுவை தொகை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, வேளாண்மை இணை இயக்குனர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி, விவசாயிகளிடம் தங்கள் பகுதிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் சரியாக இயக்கப்படுகிறதா? என்று கேட்டார். அப்போது பெரும்பாலான விவசாயிகள் சரிவர பஸ்கள் இல்லை என்றும், குறிப்பிட்ட நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்துவது இல்லை என்றும், சில பஸ்களின் இயக்க நேரம் திடீரென மாற்றம் செய்யப்படுவதாக புகார் கூறினர்.

அப்போது கலெக்டர், போக்குவரத்து துறை அதிகாரிகளிடம், பஸ்களின் இயக்க நேரம் மாற்றக்கூடாது. விவசாயிகள் கேட்டுள்ள பகுதிகளுக்கு முடிந்த வரை பஸ்களை இயக்க வேண்டும். இல்லையென்றால் நான் தலையிட்டு தனியார் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு முன்னதாக கலெக்டர் குப்பநத்தம் அணை திறப்பு விழாவுக்கு சென்றுவிட்டு மதியம் சுமார் 1 மணிக்கு வந்தார்.

முன்னதாக விவசாயிகள், போளூரில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலை மூலம் பல கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்க வேண்டும் என்று ஆவேசமாக பேசி போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளிக்குள் நிலுவை தொகை வழங்க வேண்டும் இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.

கூட்டத்திற்கு கலெக்டர் வந்ததும் போளூர் சர்க்கரை ஆலையின் அலுவலரிடம் நிலுவை தொகை எப்போது வழங்கப்படும் என்று கேட்டார். அதற்கு சர்க்கரை ஆலையின் அலுவலர் விரைவில் நிலுவை தொகை வழங்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் சலூன் கடைகளை திறக்க அனுமதி கோரி முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்
சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்று பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு: புதுவையில் மின்துறை ஊழியர்கள் போராட்டம்
தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கண்களில் கருப்பு துணி கட்டி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம்
கண்களில் கருப்பு துணி கட்டி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம்.
5. கொரோனா நிவாரண உதவி வழங்க கோரி இசைக்கருவிகளை வாசித்து சவர தொழிலாளர்கள் போராட்டம்
கொரோனா நிவாரண உதவி வழங்க கோரி இசைக்கருவிகளை வாசித்து சவர தொழிலாளர்கள் போராட்டம்.