சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவசாயி கைது
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்,
சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவிற்கு கடந்த மாதம் 18-ந்தேதி ஒரு கடிதம் வந்தது. அதில் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கும் என்றும் எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதம் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் மின்னக்கல்லை சேர்ந்த மணிவேல் என்ற முகவரியில் இருந்து வந்து இருந்தது.
இது குறித்து அவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் மாநகர போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் ஜங்ஷன் ரெயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் அந்த கடிதத்தில் இருந்த முகவரியை வைத்து மணிவேலை போலீசார் சேலம் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் ரேஷன் அரிசியை வாங்கி அதை அதிக விலைக்கு விற்பனை செய்ததால் பல முறை கைது செய்யப்பட்டவர் என்று தெரிந்தது. மேலும் அவர் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதவில்லை என்பதும் தெரிய வந்தது. இதையொட்டி மணிவேலின் நண்பர் திருச்செங்கோடு அருகே உள்ள மாமுண்டி பகுதியை சேர்ந்த விவசாயி ரவிக்குமார் (வயது 49) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையொட்டி ரவிக் குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். இது குறித்து போலீசார் கூறியதாவது:-
ரவிக்குமார் கோழி வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். ரேஷன் அரிசியை தீவனமாக போட்டு கோழிகளை வளர்த்து வந்து உள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்கு ரேஷன் அரிசி கிடைக்கவில்லை. இதனால் மணிவேலிடம் சென்று விலைக்கு ரேஷன் அரிசி கேட்டு உள்ளார். அதற்கு அவர் தர மறுத்து உள்ளார்.
ரவிக்குமார் ஒரு கட்டத்தில் நேராக ரேஷன் கடைகளுக்கு சென்று அவரே அரிசி வாங்கி வந்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. மணிவேலை பழிவாங்க அவர் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதி உள்ளார்.இவ்வாறு போலீசார் கூறினர்.

Related Tags :
Next Story