வசாய், விராரில் பெருகி வரும் ரவுடித்தனத்தை சிவசேனா ஒடுக்கும்; உத்தவ் தாக்கரே பேச்சு


வசாய், விராரில் பெருகி வரும் ரவுடித்தனத்தை சிவசேனா ஒடுக்கும்; உத்தவ் தாக்கரே பேச்சு
x
தினத்தந்தி 19 Oct 2019 4:47 AM IST (Updated: 19 Oct 2019 4:47 AM IST)
t-max-icont-min-icon

வசாய், விராரில் பெருகி வரும் ரவுடித்தனத்தை சிவசேனா முடிவுக்கு கொண்டு வரும் எனஅக்கட்சிதலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.

வசாய், 

மராட்டிய சட்டசபை தேர்தலில் பால்கர் மாவட்டத்தில் உள்ள நாலச்சோப்ரா தொகுதியில் சிவசேனா சார்பில், என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டான முன்னாள் போலீஸ் அதிகாரி பிரதிப் சர்மா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் உங்களுக்கு ஒரு போலீஸ் அதிகாரியை கொடுத்து உள்ளேன். உங்களது பிரதிநிதியாக ஒரு போலீஸ்காரர் வர வேண்டுமா? அல்லது திருடன் வரவேண்டுமா? என முடிவு செய்யுங்கள்.

வசாய்- விரார் பகுதியில் பெருகி வரும் ரவுடித்தனத்தை சிவசேனா முடிவுக்கு கொண்டு வரும். இந்த பகுதியில் அனைத்து வளர்ச்சி திட்டங்களுக்கும் சிவசேனா ஆதரவாக இருக்கும்.

இந்த திட்டங்கள் சாமானியரை பாதிக்கும் என்றால் சிவசேனா தெருவில் இறங்கி போராடும். பால்கர் மாவட்டம் வாதாவனில் ஜவஹர்லால் நேரு துறைமுக டிரஸ்ட் துறைமுகம் அமைக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த திட்டம் தடுத்து நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story