மாவட்ட செய்திகள்

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை; கோர்ட்டு தீர்ப்பு + "||" + Man jailed for 7 years for fraud

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை; கோர்ட்டு தீர்ப்பு

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை; கோர்ட்டு தீர்ப்பு
திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
திருப்பூர்,

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 60). இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் குமரானந்தபுரத்தை சேர்ந்த முபாரக் அலி உள்பட பலர் ஏலச்சீட்டுக்கு பணம் கட்டி வந்துள்ளனர். மொத்தம் ரூ.9 லட்சம் முதிர்வு தொகையை கொடுக்காமல் குமார் இருந்துள்ளார்.


இதுகுறித்து கடந்த ஆண்டு திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார், உரிமம் பெறாமல் ஏலச்சீட்டு நடத்தியது, மோசடி செய்தது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ஏலச்சீட்டு நடத்தி பணம் கொடுக்காமல் மோசடி செய்த குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியருக்கு 10 ஆண்டு சிறை
திருவலம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவழக்கில் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியருக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2. கப்பலில் வேலை வாங்கி தருவதாக கொத்தனாரிடம் ரூ.13¼ லட்சம் மோசடி தம்பதி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
தக்கலை அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி கொத்தனாரிடம் ரூ.13¼ லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.48½ லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது
வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.48½ லட்சம் மோசடிசெய்த நகைமதிப்பீட்டாளர் கைதுசெய்யப்பட்டார்.
4. மத்திய அரசு நடவடிக்கையால் மியான்மரில் சிறைபிடிக்கப்பட்ட 5 இந்தியர்கள் விடுதலை
மத்திய அரசு நடவடிக்கையால் மியான்மரில் சிறைபிடிக்கப்பட்ட 5 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
5. தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.14 லட்சம் மோசடி ஒருவர் கைது; மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
கள்ளக்குறிச்சியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.14 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.