காரைக்குடி நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள்; கலெக்டர் ஆய்வு
காரைக்குடி நகராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
காரைக்குடி,
காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட சூடாமணிபுரம் மற்றும் பஸ்நிலைய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார். பின்பு அவர் பொதுமக்களிடம் கூறுகையில், தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் வீடுகள் மற்றும் தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மழைநீர் மற்றும் கழிவுநீர்களை தேங்கவிடக் கூடாது. காரணம் தண்ணீர் தேங்குவதால் லார்வா புழுக்கள் எளிதாக உற்பத்தியாகி, டெங்கு போன்ற கொடிய நோய்களை உருவாக்கக்கூடிய கொசுக்கள் உருவாகிவிடும்.
அது பொதுமக்களுக்கு நோய்களை பரப்பும் ஆபத்தான வேலைகளை செய்து விடும், எனவே ஆரம்பத்திலேயே இதை தடுக்கும் வண்ணம் ஒவ்வொரு வீடுகளிலும் தினமும் பயன்படுத்தும் தண்ணீர் குடம் மற்றும் நீர்த்தேக்கும் தொட்டிகளை மூடிவைத்து பயன்படுத்த வேண்டும். அதேபோல் நீர்தேக்கும் பாத்திரங்களை தினமும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.
வீட்டில் தேவையற்ற பொருட்களை தேக்கி வைக்க வேண்டாம். அதில் தண்ணீர் தேங்கும் போது கொசு உற்பத்தியாகிவிடும். எனவே, அவ்வப்போது வீட்டின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல், குடிநீரை சூடாக்கி பயன்படுத்த வேண்டும். காய்ச்சல் போன்ற அறிகுறி தெரிந்தால் அருகாமையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு உடனே சென்று மருத்துவரின் ஆலோசனையை பெற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனையில் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. ஆகையால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
மேலும் நகராட்சி மூலம் தூய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தினமும், ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் சென்று தூய்மையாக உள்ளதா என கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அந்தந்தப் பகுதி தூய்மை பணியாளர்கள் தினமும் ஒவ்வொரு வீடாக சென்று டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் புகைமருந்து தெளிக்க வேண்டும்.
பின்னர், பொதுமக்களுக்கு வழங்கும் தண்ணீர் குளோரின் கலந்து வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை வாரம் ஒருமுறை சுத்தம் செய்திடவும், அதேபோல் பொதுமக்களும் தண்ணீரை வீணாக்காமல், தேவைக்கு பிடித்து பயன்படுத்த வேண்டும்.
சுகாதார பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்துவதுடன், நோய் தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி தங்கள் வீடு மட்டுமன்றி சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். டெங்கு என்னும் கொடி நோய் யாருக்கும் பாதிக்காதவாறு, எல்லோரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து காரைக்குடி பஸ்நிலையத்தில் உள்ள பொது கழிப்பறைகள் மற்றும் கடைகள், சுற்றுப்புறங்களை ஆய்வு மேற்கொண்டு தூய்மையாகவும், சுத்தமாகவும் பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில் கலெக்டர் தலைமையில் மாணவ-மாணவிகள் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர், சூடாமணிபுரம் நகரில் மருத்துவ குழுவினர் மூலம் வழங்கப்பட்ட நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார். இதில் காரைக்குடி நகராட்சி ஆணையர் சுந்தரம்பாள், நகராட்சி பொறியாளர் ரங்கசாமி, தாசில்தார் பாலாஜி, நகர் நல அலுவலர் டாக்டர் பிரவீன்குமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story