விசாரணைக்கு பிரபுல் பட்டேல் ஒத்துழைக்கவில்லை - அமலாக்கத்துறை தகவல்


விசாரணைக்கு பிரபுல் பட்டேல் ஒத்துழைக்கவில்லை - அமலாக்கத்துறை தகவல்
x
தினத்தந்தி 20 Oct 2019 5:27 AM IST (Updated: 20 Oct 2019 5:27 AM IST)
t-max-icont-min-icon

தாவூத் இப்ராகிம் கூட்டாளியுடன் வர்த்த தொடர்பு வழக்கில், விசாரணைக்கு பிரபுல் பட்டேல் ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மும்பை,

நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி இக்பால் மிர்ச்சி மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்தது. அவர் கடந்த 2013-ம் ஆண்டு லண்டனில் மரணம் அடைந்தார். அவருடன் முன்னாள் மத்திய மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரபுல் பட்டேலுக்கு வர்த்தக தொடர்பு இருந்ததாக தெரியவந்தது.

இது தொடர்பாக நேற்றுமுன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர் விசாரணைக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தேவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப் லிமிடெட் (எச்.டி.எப்.எல்.), சன்பிலிங் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் இக்பால் மிர்ச்சியுடன் வர்த்தக தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது. எச்.டி.எப்.எல். நிறுவனம் சன்பிலிங் நிறுவனத்துக்கு ரூ.2 ஆயிரத்து 186 கோடி வரை கடன் வழங்கியது. இந்த பணம் சன்பிலிங் நிறுவனம் மூலம் இக்பால் மிர்ச்சி மற்றும் அவரது கூட்டாளிகளின் கணக்கிற்கு மாற்றப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று எச்.டி.எப்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான 12 இடங்களில் அமலாக்கததுறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

Next Story