மணப்பாறை அருகே, மயில்களை வேட்டையாடிய, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைது - துப்பாக்கி பறிமுதல்


மணப்பாறை அருகே, மயில்களை வேட்டையாடிய, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைது - துப்பாக்கி பறிமுதல்
x
தினத்தந்தி 21 Oct 2019 4:00 AM IST (Updated: 20 Oct 2019 11:32 PM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே மயில்களை வேட்டையாடிய ஓய்வு பெற்ற ராணுவ வீரரை வனத்துறையினர் கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் புதுப்பட்டி அருகே ஒருவர் மயில்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுவதாக திருச்சி மாவட்ட வன அலுவலர் சுஜாதாவிற்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அவருடைய உத்தரவின்பேரில் மணப்பாறை வன அலுவலர் மாதேஷ்வரன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மயில்களை வேட்டையாடிய நபரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, 2 மயில்கள் வேட்டையாடப்பட்டிருப்பது தெரியவந்தது.

அந்த நபரிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் புதுப்பட்டியை சேர்ந்த தங்கராசு(வயது 42) என்பதும், ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தற்போது துவரங்குறிச்சியில் உள்ள வங்கி ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் அவர், மயில்களை பி.பி.எல். என்ற வகையை சேர்ந்த துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதும், அதில் ஒரு மயிலின் இறகுகளை நீக்கி, சமையலுக்கு தயார் நிலையில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தங்கராசை, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த வனத்துறையினர், அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் இறந்த நிலையில் 2 மயில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story