மாவட்ட செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே, சரக்கு வாகனம் மோதி டி.வி. மெக்கானிக் சாவு + "||" + Near Jayankondam, Freight vehicle collides with TV Death of the Mechanic

ஜெயங்கொண்டம் அருகே, சரக்கு வாகனம் மோதி டி.வி. மெக்கானிக் சாவு

ஜெயங்கொண்டம் அருகே, சரக்கு வாகனம் மோதி டி.வி. மெக்கானிக் சாவு
ஜெயங்கொண்டம் அருகே, சரக்கு வாகனம் மோதி டி.வி. மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
செந்துறை, 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(வயது 45). டி.வி. மெக்கானிக்கான இவர் தனது வீட்டிற்கு முன்னால் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். 

அப்போது மருதூர் தெற்கு பட்டியில் இருந்து அதிவேகமாக வந்த சரக்கு வேன் செல்வம் மீது மோதிவிட்டு, சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் செல்வம் படுகாயமடைந்தார். மரம் முறிந்து வீட்டிற்கு செல்லும் மின்கம்பியில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை வாகனம் ஓட்ட அனுமதித்து விபத்திற்கு காரணமான சிறுவனின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாங்கண்ணி அருகே, மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; 2 வயது குழந்தை பலி போலீசார் விசாரணை
வேளாங்கண்ணி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. க.பரமத்தி அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பட்டதாரி ஆசிரியர் பலி
க.பரமத்தி அருகே பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பட்டதாரி ஆசிரியர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார்.
3. திருச்சி ஜி-கார்னர் அருகே விபத்து: லாரி மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி
திருச்சி பொன்மலை ஜி-கார்னர் அருகே லாரி மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.
4. என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் விபத்து: கன்வேயர் பெல்ட்டில் வாகனம் மோதல்; 17 பேர் காயம்
என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் வாகனம் மோதிய விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.
5. மோதிய வேகத்தில் நிலைதடுமாறியது, பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி; மொபட்டில் சென்றவரும் சாவு
உசிலம்பட்டி அருகே மொபட் மீது மோதிய வேகத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் மற்றும் மொபட்டில் சென்றவரும் பரிதாபமாக இறந்தனர்.