தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு ரெயிலில் செல்ல முன்பதிவு டிக்கெட் எடுக்க குவிந்த பொதுமக்கள்


தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு ரெயிலில் செல்ல முன்பதிவு டிக்கெட் எடுக்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 20 Oct 2019 9:45 PM GMT (Updated: 20 Oct 2019 8:37 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு ரெயிலில் செல்வதற்காக முன்பதிவு டிக்கெட் எடுக்க நேற்று ஏராளமானவர்கள் குவிந்தனர்.

திருப்பூர், 

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு தங்களது சொந்த ஊர்களுக்கு நீண்ட விடுமுறையில் செல்வது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தயாராகி வருகிறார்கள். இதன்படி பஸ் மற்றும் ரெயில்களில் டிக்கெட்டுகள் எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு டிக்கெட் எடுக்கும் மையத்தில் ரெயில் டிக்கெட் எடுப்பதற்கு பொதுமக்கள் பலர் குவிந்தனர். இதில் அதிகமாக வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இருந்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்து இருந்து டிக்கெட் எடுத்து சென்றனர். இன்னும் சில நாட்களே தீபாவளி பண்டிகைக்கு உள்ளதால் டிக்கெட் பெரும்பாலான ரெயில்கள் மற்றும் பஸ்களில் முடிவடைந்து விட்டன. மீதமுள்ள ரெயில்கள் மற்றும் பஸ்களிலும் டிக்கெட் விற்பனை மும்முரமாக நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.

Next Story