மாவட்ட செய்திகள்

பல இடங்களில் வீடு புகுந்து திருடிய 4 பேர் கைது - 41 பவுன் நகை மீட்பு + "||" + In many places, broke into the house Four arrested for theft - 41 Bown Jewelry Recovery

பல இடங்களில் வீடு புகுந்து திருடிய 4 பேர் கைது - 41 பவுன் நகை மீட்பு

பல இடங்களில் வீடு புகுந்து திருடிய 4 பேர் கைது - 41 பவுன் நகை மீட்பு
ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் வீடு புகுந்து திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 41 பவுன் நகை மீட்கப்பட்டது.
பெருந்துறை, 

பெருந்துறை அருகே உள்ள சுள்ளிப்பாளையம் வெற்றிநகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 79). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் 4 பேர் அங்கு வந்தனர்.

அதில் 2 பேர் வீட்டுக்கு வெளியே நின்றனர். மற்ற 2 பேர் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு தூங்கி கொண்டிருந்த ஆறுமுகத்திடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் ஆறுமுகம் சத்தம் போட்டார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதை அறிந்ததும் 4 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். இதுகுறித்து ஆறுமுகம் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் குற்றவாளிகளை பிடிக்க பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று பகல் 11 மணி அளவில் பெருந்துறை-குன்னத்தூர் ரோட்டில் வீரணம்பாளையம் நால்ரோடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.

அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் 4 பேரும் தேனி அரண்மனை நகரை சேர்ந்த முத்தையா (42), ஆறுமுகம் (37), காளிமுத்து (30), புஞ்சைபுளியம்பட்டி பனையம்பள்ளி அருகே உள்ள புஜங்கானூர் எஸ்.பி.என்.நகரை சேர்ந்த சிவா (35) ஆகியோர் என்பதும், 4 பேரும் சுள்ளிப்பாளையம் வெற்றிநகரில் ஆறுமுகம் என்பவரது வீடு புகுந்து 2 பவுன் நகையை பறித்ததையும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி பெருந்துறை ஈரோடு ரோட்டில் உள்ள வாய்க்கால்மேடு லேனா அவென்யூவில் குடியிருக்கும் பிரகாசின் மனைவி சவீதாவிடம் 11 பவுன் நகையை பறித்தது தெரியவந்தது.

ஏப்ரல் மாதம் 16-ந் தேதி அன்று கோபி புதுப்பாளையம் ஜே.ஜே.நகர் ஆனந்த் என்பவரது வீடு புகுந்து 2 பவுன் தங்க சங்கிலியையும், மே மாதம் 14-ந் தேதி அன்று பெருந்துறை நேருவீதியில் உள்ள கால்நடை டாக்டர் செங்கோடனின் வீட்டில் 16 பவுன் நகையையும் பறித்துள்ளனர்.

ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி அன்று இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்த கோபி சவண்டப்பூர் பாரதிநகரை சேர்ந்த சந்திரனின் வீடு புகுந்து அவருடைய மனைவி மங்கையர்க்கரசி மற்றும் கவுந்தப்பாடி சலங்கபாளையத்தை சேர்ந்த ராமேஸ்வரன் மனைவி ரங்கநாயகியிடம் (36) 5 பவுன் தாலிசங்கிலியை பறித்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப் பட்ட 41 பவுன் நகையும் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரும் ெபருந்துறை முதல் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மாஜிஸ்திரேட்டு சவீதா விசாரித்து 4 பேரையும் 15 நாட்கள் காவலில் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் கைது
திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
2. ராமேசுவரத்தில் தந்தை அடித்து கொலை; வாலிபர் கைது
ராமேசுவரத்தில் தந்தையை அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. நடிகை பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்த முக்கிய குற்றவாளி கைது
நடிகை பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த முக்கிய குற்றவாளியை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
4. மாற்றுத்திறனாளி வீட்டில் நகை திருடிய நகராட்சி தூய்மை பணியாளர் கைது
மாற்றுத்திறனாளி வீட்டில் நகை திருடிய நகராட்சி தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
5. சிவகாசி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை கணவன் கைது
சிவகாசியில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.