ஓசூரில் குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி


ஓசூரில் குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 21 Oct 2019 4:15 AM IST (Updated: 21 Oct 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.

ஓசூர்,

ஓசூர் வெங்கடே‌‌ஷ் நகர் அலசநத்தம் சாலையைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணப்பா. இவரது மகன் சந்திரே‌‌ஷ் (வயது 12). இவன் அலசநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் மாணவர் சந்திரே‌‌ஷ் வெங்கடே‌‌ஷ் நகர் சீதம்மா குட்டையில் நேற்று முனதினம் மதியம் குளிக்க சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக அவன் நீரில் முழ்கி பலியானான்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பத்தில் கடந்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதி 2 மாணவர்களும், 25-ந் தேதி 2 மாணவிகளும், 26-ந் தேதி ஓசூரில் ஒரு மாணவியும், 28-ந் தேதி ஊத்தங்கரையில் 2 மாணவர்களும், 30-ந் தேதி மகராஜகடையில் ஒரு மாணவரும் நீரில் மூழ்கி இறந்தனர். இதன் தொடர்ச்சியாக இந்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி வேப்பனப்பள்ளியில் 3 மாணவிகள் ஏரியில் மூழ்கி இறந்தனர். 4-ந் தேதி சூளகிரியில் கல்லூரி மாணவரும், நாகரசம்பட்டியில் ஆண் ஒருவரும், 5-ந் தேதி சூளகிரி அருகே ராமாபுரத்தில் பள்ளி மாணவரும், அவரது தந்தையும் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி இறந்தனர்.

இந்த மாதம் 6-ந் தேதி பாம்பாறு அணையில் மூழ்கி புதுப்பெண், 2 கல்லூரி மாணவிகள், ஒரு மாணவர் 4 பேர் இறந்தனர். கடந்த 12-ந் தேதி கிரு‌‌ஷ்ணகிரியில் கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் ஒருவர் பலியானார். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ஓசூரில் பள்ளி மாணவர் ஒருவர் குட்டையில் மூழ்கி பலியாகி உள்ளார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் நீரில் மூழ்கி 21 பேர் இறந்துள்ளனர். அதில் பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் 17 பேர் என்பது குறிப்பிடத் தக்கது.

Next Story