விஜயாப்புரா அருகே சோகம் பெருச்சாளி கடித்து 6 மாத குழந்தை சாவு
விஜயாப்புரா அருகே, பெருச்சாளி கடித்து 6 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.
பெங்களூரு,
பெற்றோர்களே கவனம், வீட்டில் பச்சிளம் குழந்தைகள் இருக்கும்போது அவர்களை பெற்றோர்கள் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக வீட்டை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். அத்துடன் வீட்டில் குழந்தைகளை பாதுகாப்பான இடத்தில் தூங்க வைக்க வேண்டும்.
குழந்தைகள் தூங்கும் இடத்திற்கு எலி, பெருச்சாளி மற்றும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் கூட போக முடியாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது குழந்தைகளின் உயிரை பறித்துவிடும். அதுபோல் பெருச்சாளி ஒன்று பச்சிளம் குழந்தையின் உயிரை பறித்த சம்பவம் விஜயாப்புரா மாவட்டத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி தாலுகா சுரகிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோலப்பா. இவருடைய மனைவி கீதா. இந்த தம்பதிக்கு பிறந்து ஆறு மாதங்களை ஆன பச்சிளம் ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் திருவிழாவுக்காக சிந்தகி அருகே உள்ள கெலகேரி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஒசூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கீதா சென்றார். கணவர் கோலப்பா, மகன் ஆகியோரையும் அவர் உடன் அழைத்து சென்றார்.
நேற்று முன்தினம் இரவில் கீதா தனது குழந்தையுடன் வீட்டில் தரையில் படுத்து தூங்கினார். இந்த வேளையில் வீட்டுக்குள் நுழைந்த ஒரு பெருச்சாளி, கீதா அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் காலை கடித்து இழுத்து சென்றது. இதனால் குழந்தை வலி தாங்க முடியாமல் அழுது மூச்சுத்திணறி இறந்தது. இதற்கிடையே, கண்விழித்த கீதா குழந்தை இறந்ததை அறிந்து கதறி அழுதார். இந்த சம்பவம் நேற்று அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story