தேர்தல் பிரசாரத்தின் போது மந்திரி பங்கஜா முண்டேவை ஆபாசமாக பேசியதாக தனஞ்செய் முண்டே மீது வழக்குப்பதிவு
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது மந்திரி பங்கஜா முண்டேவை, எதிர்த்து அந்த தொகுதியில் களம் இறங்கி உள்ள அவரது ஒன்றுவிட்ட சகோதரர் தனஞ்செய் முண்டே ஆபாசமாக பேசியதாக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பீட்,
மராட்டிய சட்டசபை தேர்தலில் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி தொகுதியில் பா.ஜனதா சார்பில், மறைந்த முன்னாள் மத்திய மந்திரி கோபிநாத் முண்டேயின் மகளும், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியுமான பங்கஜா முண்டே போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது ஒன்றுவிட்ட சகோதரரும், சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவருமான தனஞ்செய் முண்டே களம் இறங்கி உள்ளார்.
இந்தநிலையில், தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் மந்திரி பங்கஜா முண்டேவை தனஞ்செய் முண்டே ஆபாசமாக பேசும் வீடியோ ஒன்று நேற்றுமுன்தினம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. கெஜ் தாலுகாவில் உள்ள விடா என்ற கிராமத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது தனஞ்செய் முண்டே மந்திரி பங்கஜா முண்டேவை இப்படி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
அந்த வீடியோ காட்சியை பார்த்து பா.ஜனதாவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் தனஞ்செய் முண்டேவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது உருவபொம்மையையும் எரித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது.
தனஞ்செய் முண்டேவுக்கு எதிராக அப்பகுதியை சேர்ந்த பா.ஜனதா தலைவர் ஜூகல் கிஷோர் லோகியா போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் அவர் மீது அவதூறு பரப்புதல், பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தனஞ்செய் முண்டே மீது பா.ஜனதா சார்பில் தேர்தல் கமிஷன் மற்றும் பெண்கள் கமிஷனிலும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், மந்திரி பங்கஜா முண்டேயை ஆபாசமாக பேசியதாக தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை தனஞ்செய் முண்டே திட்டவட்டமாக மறுத்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியலில் நான் சொந்த முயற்சியில் என்னை நிலைநிறுத்தி கொண்டு இருக்கிறேன். விடாவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நான் எனது சகோதரி பெயரை (பங்கஜா முண்டே) எடுக்கவில்லை. அண்ணன், தங்கை உறவுக்கு ஊறு விளைவிக்கும் வார்த்தைகளை நான் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. இது எனது அரசியல் வாழ்க்கையை முடிக்கும் முயற்சி.
நான் பங்கஜா முண்டேவை பற்றி பேசியதாக பரப்பப்படும் வீடியோ முற்றிலும் போலியானது. என்னுடைய பேச்சு முற்றிலும் எடிட் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. அதன் உண்மை தன்மை குறித்து தடவியல் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story