மாவட்ட செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே, குடிநீர் பிரச்சினையால் கிராம மக்கள் அவதி + "||" + Near Thekkanikottai, Due to the problem of drinking water The villagers are Avadi

தேன்கனிக்கோட்டை அருகே, குடிநீர் பிரச்சினையால் கிராம மக்கள் அவதி

தேன்கனிக்கோட்டை அருகே, குடிநீர் பிரச்சினையால் கிராம மக்கள் அவதி
தேன்கனிக்கோட்டை அருகே குடிநீர் பிரச்சினையால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது மேகலகவுனூர் கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சிலர் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் குடிநீருக்காக அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து மோட்டாரில் இருந்து தண்ணீர் எடுத்து செல்வதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் கூறினார்கள்.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை தெரிவித்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. எனவே, மேகலகவுனூர் பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
2. கிள்ளை பகுதியில், மழை விட்டும் வடியாத தண்ணீர் - கிராம மக்கள் அவதி
கிள்ளை பகுதியில் மழை விட்டும் தண்ணீர் வடியாததால் கிராம மக்கள் அவதியுறுகின்றனர்.
3. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி லாரியை சிறைபிடித்து பெண்கள் போராட்டம் - தர்மபுரியில் பரபரப்பு
தர்மபுரியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி நகராட்சி லாரியை சிறைபிடித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. முசிறி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு
முசிறி ஊராட்சி காட்டுப்பாளையம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
5. திருவெண்ணெய்நல்லூர் அருகே, குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.