கடற்கரை மேலாண்மை மண்டலம் அமைக்க எதிர்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கடற்கரை மேலாண்மை மண்டலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திசையன்விளை,
நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல், தோமையர்புரம் உள்பட 10 கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு, கட்டுமர மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம் என்பதை மாற்றி கடற்கரை மேலாண்மை மண்டலம் என்ற புதிய சட்டத்தை அமல்படுத்த இருப்பதை கண்டித்தும், மீனவர்கள் 12 கடல் மைல் தூரத்திற்கு அப்பால் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்ற சட்டத்தை எதிர்த்தும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த சட்டங்களினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, மீன்பிடி தொழிலும் முழுமையாக பாதிக்கப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
மீனவர்களின் போராட்டத்தினால் நேற்று கடற்கரையோரங்களில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மீனவர் பாதுகாப்பு பேரவை மாநில பொதுச்செயலாளர் அந்தோணி தலைமையில் மீனவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story