முழுக்கோடு பகுதியில் சாலைகளை சீரமைக்கக்கோரி வாழை நடும் போராட்டம்
முழுக்கோடு பகுதியில் சாலைகளை சீரமைக்கக்கோரி பா.ஜனதாவினர் வாழை நடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அருமனை,
அருமனை அருகே முழுக்கோடு ஊராட்சிக்குட்பட்ட புண்ணியம்-மருதூர்கோணம், பொற்றிவிளை, மழுவன்சேரி ஆகிய சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
தற்போது பரவலாக பெய்து வரும் மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முழுக்கோடு ஊராட்சிக்குட்பட்ட சாலைகளை சீரமைக்கக்கோரி பா.ஜனதா சார்பில் புண்ணியம்-மருதூர்கோணம் சாலையில் வாழை நடும் போராட்டம் நடைபெற்றது.
இந்த நூதன போராட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் சந்திரன் தலைமை தாங்கினார்.ரமேஷ், சதீஷ், முருகன் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் கலந்து கொண்டனர். சாலையில் வாழையை நட்டதால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story