பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்


பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்
x
தினத்தந்தி 22 Oct 2019 3:30 AM IST (Updated: 22 Oct 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஊத்துக்கோட்டை,

அதில் ஒரு அங்கமாக ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை பாத்திமா தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமனோகரன், சிட்டிபாபு, சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி வரவேற்றார். துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 3 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். பெற்றோர்்கள் ஆசிரியர் கழக தலைவர் சீனிவாசன், உதவி தலைமை ஆசிரியர் சுதாகர், வக்கீல்கள் வேல்முருகன், தில்லைகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story