பரங்கிப்பேட்டை அருகே தீயில் கருகி பெண் பலி சமையல் செய்த போது பரிதாபம்


பரங்கிப்பேட்டை அருகே தீயில் கருகி பெண் பலி சமையல் செய்த போது பரிதாபம்
x
தினத்தந்தி 23 Oct 2019 3:45 AM IST (Updated: 22 Oct 2019 7:11 PM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டை அருகே சமையல் செய்த போது தீயில் கருகிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை அருகே உள்ள மஞ்சக்குழி வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மனைவி வண்ணமலர் (வயது 60). இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் உள்ள ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதில் உடல் முழுவதும் தீ பரவி எரிந்ததில் உடல் கருகிய வண்ணமலர் வலியால் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வண்ணமலர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story