எனது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினால் எடியூரப்பாவின் ஊழல் குறித்த ஆவணங்கள் கிடைக்கும் குமாரசாமி பேட்டி
எனது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினால், எடியூரப்பா செய்த ஊழல் குறித்த ஆவணங்கள் கிடைக்கும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
ஹாசன்,
எனது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினால், எடியூரப்பா செய்த ஊழல் குறித்த ஆவணங்கள் கிடைக்கும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்
ஹாசன் டவுனில் உள்ள ஹாசனாம்பா கோவிலில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சாமி தரிசனம் செய்தார். இதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சியினர் வீடுகளை தவிர, எதிர்க்கட்சி தலைவர்கள் வீடுகளில் அடிக்கடி வருமான வரி சோதனை நடக்கிறது. பா.ஜனதாவில் உள்ள அனைவரும் நியாயமானவர்களா? நானும் எனது வீட்டில் வருமான வரி சோதனை எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.
ஒருவேளை எனது வீட்டில் வருமான வரி சோதனை நடந்தால், முதல்-மந்திரி எடியூரப்பா செய்து உள்ள ஊழல் குறித்து சில ஆவணங்கள் வருமான வரித்துறையினருக்கு கிடைக்கும். வடகர்நாடகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையில் நிவாரண நிதி கிடைக்கவில்லை. அந்த மக்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை.
மோடி மக்களை அழிக்க பார்க்கிறார்
மாநில அரசின் கஜானா காலியாகி விட்டதாக எடியூரப்பா கூறியுள்ளார். ஆனால் அரசின் கஜானா காலியாக வாய்ப்பே இல்லை. சித்தராமையா ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு எனது ஆட்சியில் நான் தடைபோடவில்லை. ஆனால் எனது ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு எடியூரப்பா தடை போட்டு உள்ளார்.
15 தொகுதிகளுக்கு நடக்க உள்ள இடைத்தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். இந்த தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் கஷ்டம் தீர வேண்டும் என்று ஹாசனாம்பாவிடம் வேண்டி உள்ளேன்.
மத்தியில் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தும் புதிய திட்டங்களால் நாடு பாழாகி விட்டது. தேவேகவுடா நாட்டின் பிரதமராக இருந்த போது மக்களுக்காக குரல் கொடுத்தார். ஆனால் மோடி மக்களை அழிக்க பார்க்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story